மினி உளுந்து போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

பச்சரிசி - 1 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 2

மிளகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - அரை கொத்து

தேங்காய் (சிறிய பல்லாக நறுக்கியது) - இரண்டு பத்தை

சோடா மாவு - ஒரு பின்ச்

இஞ்சி துருவியது - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் முதலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் உப்பு சோடாமாவு, பச்சைமிளகய் சேர்த்து நல்ல அரைக்கவும்.

பிறகு அதில் மிளகு, கறிவேப்பிலை, தேங்காய் நறுக்கியது, இஞ்சி துருவியது கலந்து எண்ணெயை காய வைத்து ஒரு லெமென் சைஸ் உருண்டையை உருட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: