மணியாச்சி முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
கடலைப்பருப்பு - 1 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நனைத்து இடித்து மாவாக எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே வறுத்து எடுத்து மாவாய் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லா மாவையும் ஒன்றாய் கலந்து நெய், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிவந்தவுடன், மாவினை முறுக்கு அச்சில் இட்டு, கொதிக்கும் எண்ணெய்யில் பிழிந்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.