மசாலா முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 கப்

உளுத்தமாவு - 1/4 கப்

பொட்டுக்கடலை மாவு - 1 கப்

பச்சரிசி மாவு - 1/4 கப்

பூண்டு - 10 பல்

இஞ்சி - 2 துண்டு

மிளகாய் - 12

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றினையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவுடன் தேவையான உப்பு, உளுத்தம் மாவு, பொட்டுக்கடலை மாவு, பச்சரிசிமாவு, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, அத்துடன் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவினை முள்ளு முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: