மசாலா பப்படி சாட்
தேவையான பொருட்கள்:
பப்படி - 6
சேவ் - தேவைக்கு
வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - தேவைக்கு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
உருளை - 2
பச்சை மற்றும் இனிப்பு சட்னி - தேவைக்கு
தயிர் - தேவைக்கு
மாதுளை முத்துக்கள் - தேவைக்கு
சாட் மசாலா - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பப்படி, பச்சை மற்றும் இனிப்பு சட்னி செய்து தயாராக வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் சாட் மசாலா தவிர எல்லா தூள் வகையும் சேர்த்து பிரட்டவும்.
பின் வேக வைத்த உருளை சேர்த்து பிரட்டவும்.
கடைசியாக வேக வைத்த கடலை சேர்த்து பிரட்டி கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும்.
பாத்திரத்தில் கொஞ்சம் பப்படி உடைத்து போட்டு அதில் இந்த கலவை கொஞ்சம் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் கொஞ்சம் தயிர் சேர்த்து பிரட்டவும்.
பரிமாறும் தட்டில் இன்னும் 3 பப்படி உடைத்து போட்டு அதன் மேல் கலவை வைத்து தேவைக்கு இனிப்பு மற்றும் பச்சை சட்னி ஊற்றவும்.
பின் இன்னும் சிறிது தயிர் ஊற்றி மேலே விருப்பம் போல் சேவ், மாதுளை முத்துக்கள், மல்லி தழை, சாட் மசாலா தூவி பரிமாறவும். சுவையான மசாலா பப்படி சாட் தயார்.
குறிப்புகள்:
இதில் சேவுக்கு பதில் பூந்தி பயன்படுத்தலாம்.
மாதுளை முத்துக்கள், சாட் மசாலா எல்லாம் ஆப்ஷனல் தான்.