மசாலா சுண்டல் (1)

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பட்டாணி (அல்லது) கொண்டைகடலை - 1 கப்

பெருஞ்சீரகம் - சிறிது

பட்டை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

கடுகு - தாளிக்க

உளுத்தம் பருப்பு - தாளிக்க

பச்சைமிளகாய் - 3

இஞ்சி - சிறு துண்டு

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய்ப்பூ - சிறிது

செய்முறை:

முதல் நாளே பட்டாணியை ஊற வைத்து, மறுநாள் எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வற்றல், பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, கொத்தமல்லி போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். விரும்பினால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அதனுடன் வேக வைத்த பட்டாணி, அரைத்து வைத்த விழுது, சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

இறக்கும் பொழுது மல்லி தழையும், தேங்காயும் சேர்த்து தூவி இறக்கவும்.

குறிப்புகள்: