மகிழம்பூ முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 5 கப்

புழுங்கல் அரிசி - 1 1/2 கப்

பொரிகடலை - 2 கப்

தேங்காய் - 1 மூடி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, பொரி கடலை அனைத்தையும் வருத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி அரைத்து முதல் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அனைத்து மாவுகளையும் கலந்து வெண்ணெயை சேர்த்து பிசைந்து வைக்கவும்.

தேங்காய்ப்பாலில் உப்பு சேர்த்து அதையும் மாவுடன் சேர்த்து கட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்குக் குழலில் ஒரு கண் மகிழம்பூ அச்சுப் போட்டு அதில் மாவை வைத்து துணியில் கைச் சுற்று முறுக்கு போல் அளவாக அடுக்காக பிழிந்து சிறிது நேரம் காயவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கை அதில் போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: