ப்ரெட் பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட் ஸ்லைஸஸ் - 6

கடலை மாவு - 1 கப்

இட்லி மாவு - 1/2 கப்

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை

கேசரிப் பவுடர் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரட் துண்டங்களின் குறுக்கே இரண்டாக வெட்டி, முக்கோண வடிவில் துண்டங்களாக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். அதில் இட்லி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, கேசரிப் பவுடர், பெருங்காயத் தூள் அனைத்தையும் போட்டுக் கிளறவும். அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, கட்டிகள் விழாதவாறு கரைத்துக் கொள்ளவும்.

கரைத்த மாவு மிகவும் தண்ணீராகவும், மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் பதமாக இருக்க வேண்டும்.

வாணலியில் முக்கால் பாகம் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ப்ரட் துண்டங்கள் ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, கொதிக்கும் எண்ணெய்யில் போடவும். இரண்டு புறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் போடவும்.

குறிப்புகள்: