புழுங்கலரிசி முறுக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி -3 கப்

பொட்டுகடலை -2க ப்

ஓமம் - 2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - காரத்திற்கு ஏற்ப

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை 3மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பொட்டுகடலையை மிக்ஸியில் பவுடர் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்தமாவு,பொட்டுகடலைமாவு,உப்பு,மிளகாய்தூள்,ஓமம் போட்டு தண்ணீர் தெளித்து சப்பாத்திமாவைவிட சிறிது தளர்த்தியாக பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி சூடுசெய்யவும்.மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறிய தட்டில் எண்ணை தடவி பிழிந்துவைத்து எண்ணை காய்ந்தவுடன் போட்டு திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: