புழுங்கலரிசி தட்டை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 2 கப்

பொட்டுகடலை - 1/4 கப்

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பற்கள்

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பொட்டுகடலையை அரைத்துவைக்கவும்.

பூண்டு,கறிவேப்பிலையை அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு பொட்டுகடலைமாவு,பூண்டுவிழுது,உப்பு,மிளகாய்தூள் போட்டு தேவையான தண்ணீர் தெளித்து முறுக்குமாவுபதம் பிசைந்துவைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காயவைக்கவும்.

அதற்குள் ஒரு பாலிதீன் கவரில் எண்ணைதடவி மாவிலிருந்து நெல்லிக்காயளவு மாவு எடுத்து தட்டி வைக்கவும்.

எண்ணை காய்ந்தவுடன் தட்டிவைதுள்ள மாவைபோட்டு ஒருபக்கம் வெந்தவுடன் திருப்பிவிட்டு எண்ணை சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.

எண்ணையின் அளவைபொருத்து ஒரேதடவையில் நிறையபோட்டு எடுக்கலாம்.

குறிப்புகள்: