புதினா ப்ரெட் வடை
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 6 துண்டுகள்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ப்ரெட் துண்டுகளின் ஓரத்தினை நீக்கி விட்டு பொடித்து கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கவும்.
இப்பொழுது பொடித்து வைத்துள்ள ப்ரெட் உடன் புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசையவும். (தேவையால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைத்து கொள்ளவும்.)
கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.