புதினா பக்கோடா (1)
0
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
கடலை மாவு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும்.
மாவு, சோம்பு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, மல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக பிசரி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுத்து பரிமாறவும்.