பிரெட் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கை

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

பிரெட் - 3 ஸ்லைஸ்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 10

கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி

புதினா - 2 கைப்பிடி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், புதினா, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்துக் கொள்ளவும்.

கடலை மாவு, அரிசி மாவு, உதிர்த்த பிரெட், வெங்காயம், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து தளர பிசைந்து கொள்ளவும்.

எண்ணெய் காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: