பாசிப்பருப்பு வடை (1)
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பில்லை - 5 இலை
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பினை 1/2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் பாசிப்பருப்பை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லியை மிகவும் பொடியாக அரிந்து கொள்ளவும். இதனை அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சிறிய சிறிய வடைகளாக சுட்டு எடுத்து பரிமாறவும்.