பாசிப்பருப்பு முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு - 1 1/2 கப்
ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு - 5 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மாவு வகைகள், உப்பு, பெ.பொடி, எள், வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து பரிமாறவும்.