பாசிப்பருப்பு பக்கோடா (1)
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்தமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயதூள் - 1 சிட்டிகை
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பை 2 vமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கிவைக்கவும்.
பருப்புடன் சோம்பு, மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயபொடி போட்டு நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி சுடவைத்து மாவை பக்கோடாவாக போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.