பாசிப்பருப்பு தட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குழைய வேக வைத்த பாசிப்பருப்பு - 1 கப்

அரிசி மாவு - 2 கப்

பச்சை மிளகாய் - 4

தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி

வெள்ளை எள் - 1 தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி

பொடித்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.

வேக வைத்த பாசிப்பருப்புடன் அரிசி மாவு, தேங்காய்த் துருவல், எள், பெருங்காயப் பொடி, உப்பு, வெண்ணெய், வேர்க்கடலை, அரைத்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

மெல்லிய துணியில் தட்டி சிறு குச்சியால் லேசாக குத்தி விடவும்.

குத்தினால் தான் உப்பாமல் வரும். எண்ணெயைக் காய வைத்து, தட்டைகளாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: