பருப்பு வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப்பயறு - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1/2 கப்

துவரம்பருப்பு - 1 கப்

வத்தல் - 6

பச்சை மிளகாய் - 2

உளுந்தம்பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 2

பெருங்காயம் - சிறிது

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

4 மணி நேரம் அரிசி பருப்புவகைளை ஊறவைக்கவும்.

வத்தல்,உப்பு,பெருங்காயம், பச்சைமிளகாய் இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின் அரைத்தவிழுதில் கருவேப்பிலை,வெங்காயம் நறுக்கிப்போடவும்.

பின் ஊறவைத்த அரிசி,பருப்புகளை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் தேவையான அளவு ஊற்றி சிறிது மாவை எடுத்து வடைபோல் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: