பனீர் வாழைக்காய் கட்லெட்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2 நடுத்தரம் (அல்லது) 3 சிறியது

பனீர் - 100 கிராம்

பச்சை மிளகாய் (மிகப் பொடியாக நறுக்கவும்) - 3 அல்லது 4

கொத்தமல்லி ( பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உள்ளே வைக்க பூரணம்:

பொடியாக நறுக்கின முந்திரி - 1 மேசைக்கரண்டி

திராட்சை - 1 மேசைக்கரண்டி

துருவின சீஸ் - 1 மேசைக்கரண்டி

மிளகு பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை நன்கு வேக விட்டு, தோலை உரித்து மசிக்கவும். அத்துடன் பனீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து மொத்தையாகப் பிசையவும்.

அவற்றை உருண்டைகளாக செய்து கொள்ளவும். பூரணத்திற்குத் தேவையான பொருட்களைக் கலந்து கொள்ளவும்.

ஒவ்வொரு உருண்டைக்குள்ளும், மிகச் சிறிய அளவு பூரணத்தை வைத்து நன்கு மூடவும்.

வாணலியில் எண்ணெய் காய வைத்து, கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.