பட்டாணி பருப்பு வடை
தேவையான பொருட்கள்:
பட்டாணி பருப்பு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
புதினா இலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் 1 கைப்பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, மீதியுள்ள பருப்பில் உப்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, அரைத்த மாவுடன், எடுத்து வைத்த பருப்பையும் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை வடைகளாக தட்டி, பொரித்து எடுத்து பரிமாறவும்.