பச்சை வேர்க்கடலை வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை வேர்க்கடலை- 3/4 கப்

அவல் - 1/2 கப்

பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்

பொடியாக அரிந்த கீரை - 1/2 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

வற்றல் மிளகாய் - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

அரிந்த கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலைக் கழுவவும்.

தண்ணீரை முழுவதுமாக வடித்து, பச்சை வேர்க்கடலை, மிளகாய்கள், சோம்பு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

அத்துடன் பொட்டுக்கடலை மாவு, பெருங்காயம், வெங்காயம், கீரைகள், சேர்த்து நன்கு பிசையவும்.

மெல்லியதாக சிறிய வடைகள் தட்டி மிதமான தீயில்பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: