பசலைக்கீரை பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 200 கிராம்
அரிசிமாவு - 50 கிராம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
பசலைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 3/4 கப்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவை சலித்துக் கொள்ளவும். சலித்த மாவோடு வெங்காயம், கீரை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்தூள், நெய், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். பின் சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போடவும். நன்கு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.