தூள் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

மைதா - 50 கிராம்

அரிசி மாவு - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

அரஞ்சு கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 4 கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தை மெல்லிய நீள நீளமான துண்டுகளாக நறுக்கவும்.

கடலை மாவு, அரிசி மாவு, மைதா மூன்றையும் கலந்து கலர் பவுடர், மிளகாய் தூள், உப்பு, சோடா சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசறவும்.

புட்டு பதத்திற்கு நன்கு பிசறி, வெட்டி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து பிசறவும். கலவை பிசு பிசுப்பில்லாமல் உதிர் உதிராக இருக்க வேண்டும்.

எண்ணையை சூடாக்கி கலவையை அதில் பிசறி விடவும். மொறு மொறுப்பாக வெந்ததும் எடுக்கவும். எல்லாவற்றையும் பொரித்து முடித்து கடைசியாக கறிவேப்பிலையையும் பொரித்து தூள் பஜ்ஜியுடன் சேர்த்து கலக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.