தவலை வடை
0
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
துவரம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
பயத்தம்பருப்பு - 1/2 கப்
வற்றல் மிளகாய் - 6
பெருங்காயப்பவுடர் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பல் - 1/2 கப்
மிளகு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அனைத்துப் பருப்பு, அரிசி வகைகளை போதுமான தண்ணீரில் ஊறவைத்து இறுத்து மிளகாய், உப்பு, காயத்துடன் கொரகொரப்பாக அரைக்கவும்.
நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, மிளகைத் தாளித்துக் கொட்டி, தேங்காய்ப்பல் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
பிறகு மாவினை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.