சௌ சௌ பஜ்ஜி (1)
0
தேவையான பொருட்கள்:
சௌ சௌ- 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சௌ சௌவை தோல், விதை எடுத்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சௌ சௌ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பி வேக விட்டு எடுத்து பரிமாறவும்.