சைனீஸ் காய்கறி பக்கோடா
தேவையான பொருட்கள்:
முட்டை கோஸ் - 150 கிராம்
கேரட் - 100 கிராம்
வெங்காயம் - 2
பச்சை குடை மிளகாய் - ஒன்று
சிகப்பு குடை மிளகாய் - ஒன்று
மிளகாய் சாஸ் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1/2 மேசைக்கரண்டி
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் - 1/2 தேக்கரண்டி
இனிப்பில்லாத ரஸ்க் தூள் - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மைதா - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டைகோஸ், கேரட்டை மெல்லிய குச்சிகளாக நறுக்கவும். வெங்காயத்தையும் பச்சை, சிகப்பு குடை மிளகாய்களையும் சற்று மெல்லிய வட்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.
இவையனைத்தையும் 1/2 மணி நேரம் ஃபிரிட்ஜில் மூடி போடாத பாத்திரத்தில் திறந்து வைக்கவும்.
பிறகு அத்துடன் (இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர், சாஸ் வகைகள், உப்பு சேர்த்து கலந்து மீண்டும் சுமார் 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
பிறகு எடுத்து ரஸ்க் தூள், மாவு வகைகளை சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்துக்கொண்டு, எண்ணெய் சூடானவுடன் அதில் பிசறி விட்டு பொன்னிறமானவுடன் எடுத்து, எண்ணெய் வடிந்தவுடன் பரிமாறவும்.