சீஸ் போண்டா
0
தேவையான பொருட்கள்:
துருவிய சீஸ் - 1/2 கப்
மைதா மாவு - 1 கப்
முந்திரிப்பருப்பு - 15
மல்லிக்கீரை - பாதி கட்டு
பச்சை மிளகாய் - 5
ரஸ்க் தூள் - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, அத்துடன் எண்ணெய், ரஸ்க் தூள் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
எண்ணெயை காயவைத்து ரஸ்க் தூளில் உருண்டைகளை புரட்டி, உடனே எடுத்து பரிமாறவும்.