சிக்கன் பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கனில் ஊற வைக்க:

சிக்கன் - 1/4 கிலோ

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி

சூடான எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு தூள் - தேவையான அளவு

பஜ்ஜி மாவு கலக்க:

கடலை மாவு - 1 கப்

மைதா - 1 தேக்கரண்டி

சோள மாவு - 3 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தேக்கரண்டி

ரெட் கலர் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனில் ஊற வைக்க வேண்டியவைகளை ஊறவைத்து பத்து நிமிடம் வைக்கவும்.

பஜ்ஜி மாவு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும்.

பிறகு எண்ணெயில் ஊறிய சிக்கனை பஜ்ஜி கலவையில் முக்கி பொரித்து எடுத்து எண்ணெயை வடிகட்டி சூப்புடன் பரிமாறவும்.

குறிப்புகள்: