சிக்கன் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

எலும்பில்லாத சிக்கன் (ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கியது) - 1/4 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பஜ்ஜி மாவு கரைத்து கொள்ள:

முட்டை - 1

கடலை மாவு - 3 மேசைக்கரண்டி

மைதா - 3 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கனில் ஊறவைக்க வேண்டிய பொருட்களை போட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

போண்டா மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, கெட்டியாக கொஞ்சம் தளர கரைத்து கொள்ளவும்.

பிறகு ஊற வைத்த சிக்கனை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து புதினா சட்னி (அ) தக்காளி சாஸ் இதனுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: