சாம்பார் வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

ஆப்பசோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

சாம்பார் தயாரிக்க:

துவரம்பருப்பு - 1 கோப்பை

வெங்காயம் - 2

தக்காளி - 2

புளி - நெல்லிக்காயளவு

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2 பற்கள்

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - ஒரு பிடி

வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

சர்க்கரை (அல்லது) வெல்லம் - இரண்டு தேக்கரண்டி

உப்பு தூள் - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் நீரை வடித்து விட்டு உப்பைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஆப்பசோடாவைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை காய வைத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து வைக்கவும்.

துவரம்பருப்பை கழுவி அதனுடன் தக்காளி, வெங்காயம் நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், மற்றும் எல்லாத்தூளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

பருப்பு நன்கு வெந்தவுடன் உப்பைச் சேர்த்து புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.

தொடர்ந்து வெல்லத்தை கரைத்து ஊற்றி சிறிது நீரை ஊற்றி கொதிக்க விடவும்.

சாம்பார் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

பிறகு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகை போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலையை வறுத்து சாம்பாரின் மீது கொட்டி கலக்கி விடவும்.

பிறகு வடைகளை பரிமாறும் தட்டில் அடக்கி வைத்து தேவையான சாம்பாரை அதன் மீது ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறவும்.

குறிப்புகள்: