குருவிக்கூடு போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 100 கிராம்

தோல் நீக்கிய உருளைக்கிழங்கு - 200 கிராம்

பட்டாணி - 50 கிராம்

மைதா - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 7

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் வெட்டிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை முதலியவற்றை போட்டு நன்றாக பிசைந்து பின் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். (உருண்டை குருவிக்கூடு வடிவத்தில் நடுவில் பள்ளமிட்டு உருட்டவும்.)

மைதாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு லேசாக பசைபோல் செய்து கொள்ளவும்.

பின் குருவிக்கூடு உருண்டையை மைதா பசையில் உருட்டி பின் சேமியா மேல் புரட்டவும்.

பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குருவிக்கூடு உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: