கீரை வடை (3)
0
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை (அல்லது) தண்டுக்கீரை - 1 கட்டு
உளுந்தம்பருப்பு - 1 ஆழாக்கு
கடலைப்பருப்பு - 1/4 ஆழாக்கு
பச்சை மிளகாய் - 5 (அல்லது) 6
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தையும், கடலைப்பருப்பையும் 2 மணி நேரம் ஊறப்போடவும்.
தண்ணீரை வடித்து விட்டு பச்சைமிளகாய், உப்பு போட்டு வெண்ணெய் போல் தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து அரைக்கவும்.
கீரையை பொடியாக நறுக்கிப்போட்டு பிசறி கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வடைகளாக தட்டி வேகவைத்து எடுத்து பரிமாறவும்.