கிரிஸ்பி வெஜ் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

அரிசி மாவு - 1/2 கப்

கார்ன்ஃப்ளார் - 1/4 கப்

கோஸ் - 100 கிராம்

கேரட் - 1

பேபி கார்ன் - 6

பீன்ஸ் - 6

வெங்காயம்- 2

பச்சை மிளகாய் - 3

சில்லி ப்ளேக்ஸ் - 2 தேக்கரண்டி

சமையல் சோடா - 1 பின்ச்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கவும். பேபி கார்னை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்

மற்ற காய்களையும் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.

சிறிதளவு நீரில் உப்பு, சில்லி ப்ளேக்ஸ் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.

வெங்காயம் உட்பட அனைத்துக் காய்களையும் சேர்க்கவும். கடைசியாக மாவு வகைகளை சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் போண்டாக்களாக போட்டு சிவக்கும் வரைப் பொரித்து எடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்: