கிட்ஸ் வாழைப்பூவடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்

சுத்தம் செய்த வாழைப்பூ - 1/2 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காயம் - சிட்டிகை

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவினை சுத்தம் செய்யவும். பூவின் நடுவில் இருக்கும் நரம்பையும், அதனுடன் உள்ள காம்பினை மட்டும் தனியாக எடுத்து விடவும்.

அதன் பின்னர் பூக்களை பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

கடலைப்பருப்பினை மிளகாயுடன் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்.

பின்பு ஊற வைத்ததை நீர் வடித்து விட்டு பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் வாழைப்பூவினை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தினை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் போட்டு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் நன்றாக மொருமொருப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: