காலிஃப்ளவர் பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலி ஃப்ளவர் - 1

கடலை மாவு - 100 கிராம்

பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காலி ஃப்ளவரை சிறிது காம்போடு எடுத்து வெந்நீரில் உப்பு போட்டு கழுவவும்.

பிறகு சிறிது தண்ணீர் விட்டு வேக விட்டு தண்ணீரை வடிக்கவும்.

உப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், கடலைமாவு, அரிசி மாவு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பக்குவத்திற்கு கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கரைத்த மாவில் காலி ஃப்ளவரை முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: