கார வடை (1)
0
தேவையான பொருட்கள்:
பட்டாணி பருப்பு - 1 குட்டான்
உளுந்து - 1/4 குட்டான்
வத்தல் - 4
வெங்காயம் சிறியது - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 3
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுந்தையும்,பருப்பையும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பின் அரைத்த மாவில் வெங்காயம்,உப்பு,பச்சைமிளகாய் ( நறுக்கியது) வத்தலையும் (பொடியாக நறுக்கவும்) சேர்த்து
நன்கு பிசைந்த்து உதிர்பக்கோடா போல் எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறவும்.