கார போண்டா,சலவை சட்னி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1/2 டம்ளர்
கடலை மாவு - 1/2 டம்ளர்
மைதா மாவு - 1/2 டம்ளர்
உளுத்தம்பருப்பு (தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்) - 1/2 டம்ளர்
கடலைப்பருப்பு (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்) - 1/2 டம்ளர்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் பொடி - 1 1/2 அல்லது 2 தேக்காண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை (விரும்பினால்) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ரீபைண்ட் ஆயில் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஊற வைத்திருக்கும் உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுத்தம்பருப்பு, கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய்ப்பூ, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, இஞ்சி விழுது, கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து, தண்ணீர் ஊற்றி, கெட்டித் தயிர் பதத்தில் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து போண்டா பொரித்து எடுக்கத் தேவையான அளவு ரீஃபைண்ட் ஆயில் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கலந்து வைத்திருக்கும் மாவை, போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
இரு பக்கமும் திருப்பிப் போட்டு, எண்ணெய் சலசலப்பு குறைந்து, போண்டா வெந்ததும், எடுத்து பரிமாறவும்.