கார நெய் முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1/2 கப்
மஞ்சள் - 1/2தேக்கரண்டி
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவி காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு திட்டமாக பிசையவும்.
சப்பாத்தி மாவுக்கு சேர்ப்பது போல தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்.
நன்றாக பிசைந்த பின்பு முறுக்கு அச்சில் இட்டு பிழிந்து எண்ணெய்யில் பொரித்து எடுத்து பரிமாறவும்.