காரா சேவு
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
கடலை மாவு - 1/4 கிலோ
மிளகுத்தூள் - 2 மேசைக்கரண்டி
டால்டா (அல்லது) நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து பின் தண்ணீர் இன்றி உலர வைத்து மிஷினில் / மிக்ஸில் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் கடலை மாவு, மிளகுத்தூள்,நெய், உப்பு சேர்த்து பிசைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணையை காயவைக்கவும்.
சேவு அச்சில் மாவைவைத்து சேவுகளாக எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.