காராச்சேவு (1)
0
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 200 கிராம்
அரிசிமாவு - 25 கிராம் (4 தேக்கரண்டி)
மிளகாய் - 5
கசகசா - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 சிட்டிகை
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகாய், சோம்பு, கசகசா, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
கடலைமாவு, அரிசிமாவு இரண்டுடன் நெய் சேர்த்து பிசைந்து அரைத்த மசாலாவையும், பெருங்காயம், உப்பையும் போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் காராச்சேவு கரண்டியில் தேய்த்து விடவும். வெந்ததும் எடுக்கவும். எல்லா மாவையும் தேய்த்து வேகவிட்டு எடுக்கவும்.