காய்கறி வடை (1)
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1/4 கப்
மைதா - 1/2 கப்
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
காரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - சிறுத் துண்டு
நெய் - 1/2 தேக்கரண்டி
புளித்த மோர் - 1/4 கப்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பினையும் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
முட்டைக்கோஸ், பெரிய வெங்காயம், காரட் இவைகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறின பருப்புகளுடன் கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் காரட்டை அரைத்து வைத்துள்ள மாவில் போடவும்.
மைதா மாவு, நெய், புளித்த மோர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து வடை மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுத்து பரிமாறவும்.