காய்கறி பக்கோடா (1)
0
தேவையான பொருட்கள்:
விருப்பமான காய்கள் - 1/2 கிலோ
கடலை மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறுதுண்டு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்ற அனைத்துப் பொருட்களோடும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலவையில் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.