கலப்பு வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 50 கிராம்

உளுத்தம் பருப்பு - 50 கிராம்

பயத்தம்பருப்பு - 50 கிராம்

துவரம்பருப்பு - 50 கிராம்

பச்சரிசி - 25 கிராம்

மிளகு பொடி - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் பள்ளு - 100 கிராம்

சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய் - 2

கடலை எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அனைத்து பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின்னர் நன்றாக சுத்தம் செய்து நைஸாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அதனுடன் மிளகாயையும் சேர்த்து அரைக்கவும். அரைத்து வைத்த மாவுடன் மிளகு பொடி, பெருங்காயத்தூள், தேங்காய் பள்ளு, சமையல் சோடா, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு மாவை வடையாக தட்டி எண்ணெயில் இட்டு சிவந்த நிறமாக எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: