கருப்பட்டி வடை





தேவையான பொருட்கள்:
உளுந்து - 200 கிராம்
கருப்பட்டி - 150 கிராம்
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சரிசிமாவு - 1 மேசைக்கரண்டி
பூவன் வாழை பழம் - 1
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தையும் துவரம்பருப்பையும் நன்றாக கழுவி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
வெல்லத்தை பொடிக்கவும். ஊறிய பருப்பை ஒரு வடிதட்டில் தண்ணீர் போக வடிக்கவும்.
பிறகு கிரைண்டரில் உளுந்தையும், துவரம்பருப்பையும், வாழைப்பழத்தையும் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
அவ்வப்போது கையை தண்ணீரில் நனைத்து தள்ளி விட்டு கொண்டே இருக்கவும்.
பருப்பு பாதி அரை பட்டவுடன் கருப்பட்டியை சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும். கருப்பட்டி நீர்க்கும் என்பதால் தண்ணீர் விடத் தேவையில்லை.
உளுந்து நன்றாக அரைப்பட்டு மாவு பந்து போல் வந்ததும் எடுத்து பச்சரிசி மாவும், உப்பும் சேர்த்து பிசையவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.