கருணைக்கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
முளைக்கீரை (ஏதாவது கீரை) - 1 பிடி
வெங்காயம் - 1
கார்ன் ஃப்ளார் - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாயத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கீரை, பச்சைமிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கார்ன் ஃப்ளார், கடலை மாவு, அரிசிமாவு மூன்றையும் பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் சீரகம், பச்சைமிளகாய், பொரித்துவிட்டு வெங்காயத்தையும் வதக்கி விட்டு கீரையும் போட்டு ஒரு வதக்கு வதக்கவும். (ஒரு நிமிடம் போதுமானது)
மசித்த கருணைக்கிழங்குடன் வதக்கியவற்றைப்போட்டு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பும் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டையாக்கவும்.
வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு காயவைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் உருண்டைகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்..