உருளைக்கிழங்கு முறுக்கு
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4
அரிசி மாவு - 4 மேஜைக்கரண்டி அல்லது 1 கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எள்ளு - 2 தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - 1 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்குகளை, குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ தண்ணீரில் போட்டு வைத்து நன்றாக வேக வைத்து, ஆற வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, நன்றாக கட்டிகள் இல்லாமல் மசிக்கவும். இதனுடன் மேல சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் தேவைப்படாது.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடுங்கள்.
முறுக்கு பிழியும் குழலில், மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் முறுக்கு ஷேப்பில் பிழிந்து விடுங்கள். ஒரு பக்கம் வேக 2-3 நிமிடங்கள் எடுக்கும். பிறகு முறுக்கினை ஜல்லிக்கரண்டி கொண்டு திருப்பி விட்டு 2-3 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு எண்ணெயில் இருந்து கரண்டியின் மூலம் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
அரை லிட்டர் எண்ணெய்க்கு, ஒரே நேரத்தில் 3-4 முறுக்குகள் வரை பிழிந்து விடலாம்.