உருளைக்கிழங்கு போண்டா (1)
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் வேக வைத்து பின் தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். இவை இரண்டையும் பிசைந்த உருளைக்கிழங்குடன் கலக்கவும்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதாவை தேவையான உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பிலிட்டு எண்ணெயை ஊற்றி சூடு படுத்திக் கொள்ளவும்.
உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.