உருளைக்கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
பெரிய உருளைக்கிழங்கு - 2
ரீபைன்டு ஆயில் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழஙை சிப்சுக்கு சீவுவது போல நீள நீளமாக சீவிக்கொள்ள வேன்டும்.
கடலை மாவு, அரிசி மாவு, மைதா, மிளகாய் பொடி, சோடா, கலர் பவுடர், பெருங்காயம், உப்பு எல்லம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கு சீவல்களை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
நன்றாக உப்பி வெந்ததும் (அழுத்தினால் அமுங்க கூடாது) வெளியில் எடுத்து அடுக்கவும்.