உதிரி வேர்க்கடலை பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 75 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்தூள் - 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்துக் கொள்ளவும்
கடலைமாவை சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவோடு வேர்க்கடலை, கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும். 10 நிமிடம் ஊறவிடவும்
வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். பின் சிறுசிறுத் துண்டுகளாக கிள்ளி போடவும். நன்கு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.