ஈஸி சாட்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
கொத்தமல்லி (அல்லது) புதினா (அல்லது ) கீரை வகை - 1 கப்
வெல்லம் துருவியது (விரும்பினால்) - 2 மேஜைக்கரண்டி
சோட்டா மாவு - சிட்டிகை
மஞ்சள் தூள் - சிட்டிகை
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவுடன், உப்பு, பொடியாக நறுக்கிய கீரை அல்லது புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், சோட்டா மாவு, வெல்லம், பொடியாக நறுக்கிய மிளகாய், எண்ணெய் 2 மேஜைக்கரண்டி சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இதை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைக்கவும். வெந்த இட்லியை எடுத்து துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெட்டிய துண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.