இறால் ஸ்பிரிங் ரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பிரிங் ரோல் ஷீட் - 15

இறால் - 15

கேரட் - 1

சாலட் வெள்ளரி - 1

முட்டைகோஸ் (மெலிதாக நறுக்கியது) - 1/4 கப்

சின்னவெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 5

பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 பல்

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 சிறுதுண்டு

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1

வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி

வெள்ளை அல்லது கறுப்பு மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி

சீனி - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ஓரங்களை ஒட்ட:

மைதா - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பிசிறி வைக்கவும்.

கேரட், சாலட் வெள்ளரியை 2 இன்ச் நீளத்தில் குச்சிகளாக வெட்டவும்.

வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

முட்டைகோஸ், உப்பு, சீனி, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது இக்கலவையில் சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால், சிறிதளவு கேரட், வெள்ளரி வைத்து சுருட்டவும்.

ஓரங்களை மைதா தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: